எரிவாயு சிலிண்டர் விலை 5175 ரூபாவாக அதிகரிப்பு

லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை 5175 ரூபாவாக அதிகரிப்பு

by Bella Dalima 22-04-2022 | 3:26 PM
Colombo (News 1st) இன்று (22) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டர் (12.5 Kg) விலை 5175 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் முந்தைய விலை 2750 ரூபா ஆகும். லிட்ரோ எரிவாயுவை 30 வீதமானவர்களே பயன்படுத்துவதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. குறைந்த விலையில் சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிப்பதால், நாளாந்தம் தமது நிறுவனத்திற்கு 25 கோடி ரூபாவிற்கும் அதிக நட்டம் ஏற்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, மற்றுமொரு தொகுதி சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிய கப்பல் எதிர்வரும் 26 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது. எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் குறித்த எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.