by Bella Dalima 22-04-2022 | 6:37 PM
Colombo (News 1st) இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
8 நாட்களுக்கு மாத்திரமே நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
நேற்று இரவு வேளையில் பல மாநிலங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் 173 அனல் மின் உற்பத்தி நிலையங்களில் 96 ஆலைகளில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலை அதிகரித்ததால், பெரும்பாலான நிறுவனங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியை சார்ந்து செயற்பட ஆரம்பித்தன.
இதனால் இறக்குமதியில் 12 வீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.