English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
22 Apr, 2022 | 8:34 pm
Colombo (News 1st) ரம்புக்கனை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சாமிந்த லக்ஷானின் பூதவுடல் இன்று (22) அதிகாலை அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
நியாயமான விலையில் எரிபொருளை வழங்குமாறு கோரி வரிசையில் காத்திருந்த சாமிந்த உள்ளிட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எரிபொருள் கோரிய மக்களுக்கு உயிரை இழக்க வேண்டி ஏற்படும் என எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
பொலிஸார் பயன்படுத்தியதாகக் கூறும் ஆகக்குறைந்த அதிகாரத்தினால், 19 வயதான மகளுக்கும் கல்வி பயிலும் 15 வயதான மகனுக்கும் பாதுகாப்பாக இருந்த ஒரு தந்தை இன்று உயிருடன் இல்லை.
பின்னவல யானைகள் சரணாலயத்திற்கு இலைதழைகளை வெட்டிச்சென்று வழங்குவதே கொலை செய்யப்பட்ட சாமிந்த லக்ஷானின் வாழ்வாதார மார்க்கமாக இருந்தது.
குறைந்த வருமானத்தில் குடும்பத்தை வழிநடத்திய ஒரு தந்தையின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தப் பிள்ளைகளுக்கு பக்கபலமாக இருப்பது யார்?
சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், இந்த பிள்ளைகளின் தந்தையை எவராலேனும் மீண்டும் கொண்டு வர முடியுமா?
மக்களுக்காக குரல் கொடுத்த தருணத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சாமிந்த லக்ஷானின் இறுதிக்கிரியைகள் ஹிரிவடுவ குடும்ப மயானத்தில் நாளை இடம்பெறவுள்ளன.
29 Jun, 2022 | 03:28 PM
12 Jun, 2022 | 02:59 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS