உக்ரைனின் மரியுபோல் நகரை கைப்பற்றியது ரஷ்யா

உக்ரைனின் மரியுபோல் நகரை கைப்பற்றியது ரஷ்யா; இராணுவ வீரர்களுக்கு புதின் பாராட்டு 

by Bella Dalima 21-04-2022 | 4:28 PM
Colombo (News 1st) உக்ரைனின் மரியுபோல் நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றிவிட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. மரியுபோல் நகரை ரஷ்யா கைப்பற்றியதன் மூலம் அந்நகருக்கு சுதந்திரம் கிடைத்துள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் 55 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷ்ய படைகள் உக்ரைனின் மரியபோல் நகரை முற்றுகையிட்டு தொடர் தாக்குதலை நடத்தி வந்தன. மரியுபோல் நகருக்குள் இருக்கும் உக்ரைன் வீரர்கள் தங்களுடைய ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு உடனடியாக சரணடைய வேண்டும் என ரஷ்யா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இந்நிலையில்,  மரியுபோல் நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றிவிட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. மரியுபோல் நகரை கைப்பற்றியதற்காக ரஷ்ய இராணுவ வீரர்களுக்கு அதிபர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார். மரியுபோல் நகரில் உள்ள இரும்பு தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தாமல், அந்நகரை கைப்பற்றுமாறு இராணுவத்தினருக்கு புதின் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.