by Staff Writer 21-04-2022 | 5:10 PM
Colombo (News 1st) தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் இன்று (21) தனது கடமைகளை ஆரம்பித்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் ஐக்கிய மக்கள் சக்தி சின்னத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவான அருணாச்சலம் அரவிந்தகுமார், அண்மையில் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இதற்கமைய, கொழும்பிலுள்ள தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் இராஜாங்க அமைச்சராக இன்று அவர் கடமைகளை ஆரம்பித்தார்.
இதேவேளை, அரசாங்கத்திற்கும் இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமாருக்கும் எதிராக இன்று ஹட்டனில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.