வௌியிடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது 

வௌியிடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது 

வௌியிடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது 

எழுத்தாளர் Bella Dalima

21 Apr, 2022 | 3:18 pm

Colombo (News 1st) வீட்டில் இருந்து வௌியிடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் (Face Mask) அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இன்று (21) முதல் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமானது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் நிலைமையை கருதிற்கொண்டே இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஒன்றுகூடுவது அதிகரித்து வருகின்ற நிலையில், முகக்கவசங்கள் அணிவது தொடர்பில் முன்பு காணப்பட்ட சட்டங்கள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்