வடக்கின் பெருஞ்சமர்: சென். ஜோன்ஸ் கல்லூரி 167 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது

வடக்கின் பெருஞ்சமர்: சென். ஜோன்ஸ் கல்லூரி 167 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது

வடக்கின் பெருஞ்சமர்: சென். ஜோன்ஸ் கல்லூரி 167 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது

எழுத்தாளர் Staff Writer

21 Apr, 2022 | 8:32 pm

Colombo (News 1st) யாழ். மத்திய கல்லூரிக்கும் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான வடக்கின் பெருஞ்சமர் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவிற்கு வந்துள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட சென். ஜோன்ஸ் கல்லூரி அணி அதன் முதல் இன்னிங்ஸில் 167 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

கு. ஹரிசன் 41 ஓட்டங்களையும் அ. அபிஷேக் 40 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

மத்திய கல்லூரி சார்பில் பந்துவீச்சில் ஜெ. விதுசனும், வி. கவிதர்சனும் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் பதிலளித்தாட களமிறங்கிய மத்திய கல்லூரி அணி விக்கெட் இழப்பின்றி 6 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது முதல் நாள் ஆட்டம் நிறைவிற்கு வந்தது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, 115 ஆவது வடக்கின் பெருஞ்சமராகும்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்