நாட்டின் சில பகுதிகளில் ஹர்த்தால் அனுஷ்டிப்பு

நாட்டின் சில பகுதிகளில் ஹர்த்தால் அனுஷ்டிப்பு

by Staff Writer 20-04-2022 | 7:15 PM
Colombo (News 1st) எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாட்டின் சில பகுதிகளில் இன்று (20) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். பருத்தித்துறை நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் இன்று மூடப்பட்டிருந்தன. மேலும், தனியார் பஸ் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார். வவுனியா - செட்டிக்குளத்திலும் வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை மூடி தமது எதிர்ப்பை வௌியிட்டனர். முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினரும் இன்று வர்த்தக நிலையங்களை மூடியுள்ளனர்.