ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்படுமென ஜனாதிபதி தெரிவிப்பு 

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்படுமென ஜனாதிபதி தெரிவிப்பு 

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்படுமென ஜனாதிபதி தெரிவிப்பு 

எழுத்தாளர் Bella Dalima

20 Apr, 2022 | 3:21 pm

Colombo (News 1st) ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்ற, நீதியான விசாரணை நடத்தப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவினூடாக ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, வன்முறைகளை தவிர்க்குமாறும் ஜனாதிபதி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை பிரஜைகளுக்கு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட எவ்வித தடையும் கிடையாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் தாம் கவலையடைவதாகவும் ஜனாதிபதி தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்