by Staff Writer 19-04-2022 | 11:11 AM
Colombo (News 1st) அமெரிக்காவில் பொதுப் போக்குவரத்தின் போது முகக்கவம் அணிவது கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்ட 14 மாத கால உத்தரவு சட்டவிரோதமானது என புளோரிடாவில் உள்ள கூட்டாட்சி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
அதன்படி பொதுப் போக்குவரத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.