பிரியந்த குமார படுகொலை; 6 பேருக்கு மரண தண்டனை

பிரியந்த குமார படுகொலை; 6 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை

by Staff Writer 19-04-2022 | 7:05 AM
Colombo (News 1st) பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் இலங்கை பிரஜையான பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்பிரகாரம், 06 சந்தேகநபர்களுக்கு பாகிஸ்தான் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 07 சந்தேகநபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி பிரியந்த குமார பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் படுகொலை செய்யப்பட்டார்.