பேருவளையில் ஆரம்பித்த பேரணி கொழும்பை வந்தடைந்தது 

பேருவளையில் ஆரம்பித்த பேரணி கொழும்பை வந்தடைந்தது 

எழுத்தாளர் Staff Writer

19 Apr, 2022 | 8:59 pm

Colombo (News 1st) மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் அரசாங்கத்தை விரட்டியடிப்போம் என்ற தொனிப்பொருளில் 3 நாட்களாக முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று மாலை கொழும்பை வந்தடைந்தது.

லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட பேரணிக்கு தேசிய மக்கள் சக்தியின் தவைர் அனுரகுமார திசாநாயக்க தலைமை தாங்கினார்.

கடந்த 17 ஆம் திகதி பேருவளையில் ஆரம்பித்த இந்த பேரணி மொரட்டுவை, காலி வீதியூடாக வௌ்ளவத்தை, பாமன்கடை , ஹெவ்லொக் பகுதிகளின் ஊடாக இன்று கொழும்பை வந்தடைந்தது.

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை , அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறுபட்ட தொழிற்சங்கங்கள் , இளைஞர் அணிகள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பெருமளவில் எதிர்ப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்