பாண் விலை 30 ரூபாவாலும் பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவாலும் அதிகரிப்பு 

பாண் விலை 30 ரூபாவாலும் பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவாலும் அதிகரிப்பு 

பாண் விலை 30 ரூபாவாலும் பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவாலும் அதிகரிப்பு 

எழுத்தாளர் Staff Writer

19 Apr, 2022 | 3:42 pm

Colombo (News 1st) 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாண் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் N.K. ஜயவர்தன குறிப்பிட்டார்.

இதனிடையே, உணவுப்பொதிகளின் விலையையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

20 ரூபாவால் உணவுப்பொதிகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டார்.

மரக்கறிகள் மற்றும் உணவு தயாரிப்பிற்கான அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்