பாகிஸ்தானில் புதிய அமைச்சரவை பதவியேற்பு; அதிபர் கலந்துகொள்ளவில்லை 

பாகிஸ்தானில் புதிய அமைச்சரவை பதவியேற்பு; அதிபர் கலந்துகொள்ளவில்லை 

பாகிஸ்தானில் புதிய அமைச்சரவை பதவியேற்பு; அதிபர் கலந்துகொள்ளவில்லை 

எழுத்தாளர் Bella Dalima

19 Apr, 2022 | 4:32 pm

Colombo (News 1st) பாகிஸ்தானின் புதிய அமைச்சரவை இன்று (19) பதவியேற்றுக்கொண்டது.

நிகழ்வில் அதிபர் Arif Alvi பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் மீது ஏப்ரல் 10 ஆம் திகதி நள்ளிரவு நடத்தப்பட்ட வாக்கெடுப்பு வெற்றி பெற்றதையடுத்து, அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

இதனைத் தொடர்ந்து, புதிய பிரதமராக முஸ்லிம் லீக் (N) கட்சித் தலைவரும் எதிா்க்கட்சித் தலைவருமான Shehbaz Sharif -ஐ எதிர்க்கட்சிகள் தெரிவுசெய்தன.

இந்நிலையில், அனைத்து எதிர்க்கட்சிகளும் இடம்பெறும் வகையில், புதிய அமைச்சரவை திங்கட்கிழமை (18) பதவியேற்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக பதவியேற்பு விழாவில் பங்கேற்று அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என அதிபர் ஆரிஃப் அல்வி தெரிவித்ததைத் தொடர்ந்து நேற்றைய நிகழ்வு இரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, பாகிஸ்தான் பாராளுமன்ற அவைத்தலைவர் சாதிக் சஞ்ரணி புதிய அமைச்சர்களுக்கு இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னதாக, கடந்த வாரம் நடைபெற்ற பிரதமர் Shehbaz Sharif பதவியேற்பு விழாவிலும் அதிபர்  கலந்துகொள்ளாதது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்