அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயற்படும் 41 பேர் கொண்ட குழு பாராளுமன்றில் தனிக்குழுவாக அமர தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2022 | 3:06 pm

Colombo (News 1st) அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயற்படும் 41 பேர் கொண்ட குழு பாராளுமன்றத்தில் தனியான குழுவாக அமர தீர்மானித்துள்ளது.

இது குறித்து சபாநாயகருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படும் என பிவித்துரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

குழுவின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 13 உறுப்பினர்களும் தேசிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட கட்சிகளின் 10 உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த அனுர யாப்பா உள்ளிட்ட குழுவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் 2 உறுப்பினர்களும் தனியான குழுவாக பாராளுமன்றத்தில் அமர்வதற்கு தீர்மானித்துள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்