பாடசாலை கல்வி நடவடிக்கைகளை மேலும் ஒரு மணித்தியாலத்திற்கு நீடிக்கும் தீர்மானம் இடைநிறுத்தம்

பாடசாலை கல்வி நடவடிக்கைகளை மேலும் ஒரு மணித்தியாலத்திற்கு நீடிக்கும் தீர்மானம் இடைநிறுத்தம்

பாடசாலை கல்வி நடவடிக்கைகளை மேலும் ஒரு மணித்தியாலத்திற்கு நீடிக்கும் தீர்மானம் இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

17 Apr, 2022 | 2:57 pm

Colombo (News 1st) அரச மற்றும் அரச அனுசரணையில் இயங்கும் பாடசாலைகளின் 2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை நாளை(18) ஆரம்பமாகின்றது.

நாளை(18) முதல் ஆரம்பிக்கப்படும் புதிய கல்வி வாரத்துடன், கல்வி நடவடிக்கைகளை மேலும் ஒரு மணித்தியாலத்திற்கு நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு சமீபத்தில் விடுத்த சுற்றறிக்கையில் தெரிவித்திருந்தது.

எவ்வாறாயினும், பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேலும் ஒரு மணித்தியாலத்திற்கு நீடிக்கும் தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்