by Staff Writer 16-04-2022 | 4:55 PM
Colombo (News 1st) எதிர்வரும் போகங்களுக்கு தேவையான 37,000 மெட்ரிக் தொன் யூரியாவை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த உரத்தொகையில் 7,000 மெட்ரிக் தொன் உரம் ஏற்கனவே தனியார் துறையினரால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவா குறிப்பிட்டார்.
12,000 மெட்ரிக் தொன் யூரியாவை எதிர்வரும் நாட்களுக்குள் இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இறக்குமதி செய்யப்படும் உரம், தனியார் துறையின் தலையீட்டுடனேயே நாடு முழுவதும் விநியோகிக்கப்படவுள்ளது.
இதேவேளை, 20,000 மெட்ரிக் தொன் compost உரம், 15 இலட்சம் திரவ உரம் ஆகியன இதுவரை விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் உர செயலகம் குறிப்பிட்டுள்ளது.
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, அநுராதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு உரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.