by Bella Dalima 15-04-2022 | 4:30 PM
Colombo (News 1st) புத்தாண்டு தினத்தில் திடீர் விபத்துகள் பதிவாகும் வீதம் குறைவடைந்துள்ளது.
4% விபத்துகளே பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புத்தாண்டு தினத்தில் விபத்துகளில் காயமடைந்த 150 பேர் சிகிச்சைகளுக்காக வருகை தந்ததாகவும் அவர்களில் 72 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த வருடம் புத்தாண்டு தினத்தில் 5 தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், இவ்வாண்டு ஒரேயொரு தீ விபத்து மாத்திரமே பதிவாகியுள்ளது.
12 வன்முறைச் சம்பவங்களும் 46 வீழ்ந்து காயமடைந்த சம்பவங்களும் வீட்டில் 12 விபத்துகளும் பதிவாகியுள்ளன.
புத்தாண்டு தினத்தில் வீதி விபத்துகளில் காயமடைந்த 42 பேர் சிகிச்சை பெற்று வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.