இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் பதவியிலிருந்து ஜோ ரூட் விலகல் 

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் பதவியிலிருந்து ஜோ ரூட் விலகல் 

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் பதவியிலிருந்து ஜோ ரூட் விலகல் 

எழுத்தாளர் Staff Writer

15 Apr, 2022 | 6:31 pm

Colombo (News 1st) இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் பதவியிலிருந்து ஜோ ரூட் விலகியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது.

இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜோ ரூட் இன்று அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் பறிகொடுத்த இங்கிலாந்து அணி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இழந்தது.

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய 17 டெஸ்ட் போட்டிகளில் ஒரு டெஸ்ட் போட்டியில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை விளாசிய வீரர்களின் பட்டியலில் ஜோ ரூட் முதலிடம் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்