Fitch தரப்படுத்தலில் C தரத்திற்கு இலங்கை வீழ்ச்சி

Fitch தரப்படுத்தலில் 'CC' தரத்தில் இருந்து 'C' தரத்திற்கு இலங்கை வீழ்ச்சி

by Staff Writer 14-04-2022 | 2:17 PM
Colombo (News 1st) நீண்ட கால வௌிநாட்டுக் கடன்களை மீள செலுத்துதல் தொடர்பிலான Fitch Ratings நிறுவனத்தின்  தரப்படுத்தலில் இலங்கை வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கிணங்க, புதி தரப்படுத்தலில் இலங்கை 'CC' தரத்தில் இருந்து 'C' தரத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக Fitch Ratings  நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.