போராட்டக் களத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் 

by Bella Dalima 14-04-2022 | 3:16 PM
Colombo (News 1st) ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி, எந்தவித கட்சிகளின் பங்களிப்பும் இன்றி ஜனாதிபதி செயலக முன்றலில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் இன்றும் தொடர்கின்றது. இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 6 நாட்கள் கடந்துவிட்டன. பிறக்கும் தமிழ், சிங்கள புத்தாண்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டக்களத்தில் இருந்து வரவேற்றனர். எவ்வித பேதமும் இன்றி புத்தாண்டு பிறப்பை மக்கள் கொண்டாடுகின்றனர். ஜனாதிபதி செயலக முன்றலில் இடம்பெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சூழலியலாளர்களும் சூழல் அமைப்புகளை சேர்ந்த பலரும் நேற்று மாலை இணைந்துகொண்டனர். கோட்டை ரயில் நிலைய முன்றலில், சுற்றுச்சூழல் அழிவிற்கு எதிராக எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த அவர்கள், இந்த ​போராட்டத்திலும் இணைந்துகொண்டனர்.