தேர்தல்களை நடத்த வேண்டும் என வலியுறுத்தல்

தேர்தல்களை நடத்த வேண்டும்: மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல் 

by Staff Writer 14-04-2022 | 2:05 PM
    Colombo (News 1st) மக்களின் அபிலாஷைகளுக்கும் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றமை உறுதியாகியுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற தேர்தலை தற்போது நடத்துவதற்கு தமக்கு எவ்வித அதிகாரமும் இல்லையென மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க நியூஸ்ஃபெஸ்ட் வினவியபோது தெரிவித்தார். நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் அபிலாஷைகளுக்காக முன்நிற்கின்றனரா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை பிற்போடுகின்றமையினால் இலங்கை பிரஜைகளின் உரிமை மீறப்படுவதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் உடனடியாக சட்டம் இயற்றப்பட்டு, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.