by Staff Writer 14-04-2022 | 1:57 PM
Colombo (News 1st) இந்துக்களின் 60 ஆண்டு சுழற்சியில் 36 ஆவது வருடமான சுபகிருது வருடம் இன்று மலர்ந்துள்ளது.
நாடு எதிர்நோக்கி வரும் சவால்களுக்கான தீர்வினை எதிர்பார்த்த வண்ணமே மக்கள் இன்று புத்தாண்டில் காலடி எடுத்து வைக்கின்றனர்.
வாக்கிய பஞ்சாங்கத்திற்கமைய, சுபகிருது புத்தாண்டு காலை 07.50 அளவிலும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி காலை 8.41 அளவிலும் பிறந்தது.
பிறந்திருக்கும் புது வருடம் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் நிறைந்ததாய் அமைய நியூஸ்ஃபெஸ்டின் நல்வாழ்த்துக்கள்.