மூன்று நாட்களுக்கு மின்வெட்டு இல்லை – இலங்கை மின்சார சபை

மூன்று நாட்களுக்கு மின்வெட்டு இல்லை – இலங்கை மின்சார சபை

மூன்று நாட்களுக்கு மின்வெட்டு இல்லை – இலங்கை மின்சார சபை

எழுத்தாளர் Staff Writer

13 Apr, 2022 | 8:53 am

Colombo (News 1st) இன்று(13), நாளை(14) மற்றும் நாளை மறுதினம்(15) ஆகிய தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதேநேரம், எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நிலவும் மழையுடனான வானிலையால் மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது.

நேற்றைய(12) தினத்திற்கான மின்சார கேள்வியில் 26 வீதம், நீர்மின் உற்பத்தியினால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

மின் நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களில் தற்போது 30 வீதம் வரை நீர்மட்டம் அதிகரித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்