பிலிப்பைன்ஸில் சூறாவளியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆக அதிகரிப்பு 

பிலிப்பைன்ஸில் சூறாவளியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆக அதிகரிப்பு 

பிலிப்பைன்ஸில் சூறாவளியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆக அதிகரிப்பு 

எழுத்தாளர் Bella Dalima

13 Apr, 2022 | 3:36 pm

Philippines: பிலிப்பைன்ஸை தாக்கிய மெகி (Megi) சூறாவளியினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.

மெகி சூறாவளியினால் பல கிராமங்களில் மண்சரிவும் வௌ்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அனர்த்தங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய மாகாணமான  Leyte-இல் உள்ள Baybay நகரை அண்மித்துள்ள கிராமங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

அங்கு ஆற்று நீர் பெருக்கெடுத்துள்ளதால் பலர் உயிருடன் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் வீடுகள் பல சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலர் (Pilar) எனும் கிராமத்தில் 80% வீடுகள் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளன.

 

இந்நிலையில், அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பிலிப்பைன்ஸின் தேசிய இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்