பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு அபராதம் விதிப்பு

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு அபராதம் விதிப்பு

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு அபராதம் விதிப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Apr, 2022 | 9:46 am

Colombo (News 1st) கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் (Boris Jhonson) மற்றும் நிதி அமைச்சர் ரிஷி சுனக் (Rishi Sunak) ஆகியோர் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவிய நிலையில், உலகளாவிய ரீதியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில், பிரித்தானியாவில் கொரோனா தடுப்பிற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறி, ஜூன் 19 ஆம் திகதி பிரதமர் போரிஸ் ஜோன்சன் தமது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

இதில் அமைச்சர் ரிஷி சுனக் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

நாட்டின் பிரதமரே விதிகளை மீறியமை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், லண்டன் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விதி மீறல் உறுதியானதைத் தொடர்ந்து, பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்