இலங்கை விவசாய தொழில்முனை​வோர் சங்கம் முன்வைத்துள்ள யோசனைகள் 

இலங்கை விவசாய தொழில்முனை​வோர் சங்கம் முன்வைத்துள்ள யோசனைகள் 

இலங்கை விவசாய தொழில்முனை​வோர் சங்கம் முன்வைத்துள்ள யோசனைகள் 

எழுத்தாளர் Bella Dalima

13 Apr, 2022 | 8:05 pm

Colombo (News 1st) விவசாயத்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தாமதிப்பது நாட்டின் பொருளாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பில் நேரடி தாக்கத்தை செலுத்தும் என இலங்கை விவசாய தொழில்முனை​வோர் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டின் விவசாயத்தை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறுகிய கால திட்டங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளாவன…

  • அவசியமான உரம் மற்றும் கிருமிநாசினியை வழங்குதல்
  • விவசாயிகளுக்கான தேசிய திட்டத்தை செயற்படுத்துதல்
  • துறைசார் நிபுணர்களிடம் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளல்

நீண்ட கால திட்டங்களாக இலங்கை விவசாய தொழில்முனை​வோர் சங்கம் முன்வைத்துள்ளவை…

  • விவசாய உற்பத்தி தொடர்பிலான களஞ்சிய வசதியை மேம்படுத்துதல்
  • விவசாயிகளிடையே தொழில்வாண்மையை மேம்படுத்துதல்
  • நவீன தொழில்நுட்பங்களை செயற்படுத்துதல்
  • பெறுமதி சேர்க்கப்பட்ட விவசாய உற்பத்திகளை மேம்படுத்துதல்

இரசாயன உரத்திற்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு நீண்ட காலத்திற்கு தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்