மின்னல் தாக்கியதில் முற்றாக சேதமடைந்த வீடு

by Staff Writer 11-04-2022 | 4:35 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - வித்தியாபுரம் பகுதியில் நேற்று(10) மாலை மின்னல் தாக்கியதில் வீடொன்று முற்றாக சேதமடைந்துள்ளது. முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வித்தியாபுரம் கிராமத்தில் நேற்று(10) மாலை கடும் மழை பெய்தபோது ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் வீடொன்று சேதமடைந்துள்ளது. மின்னல் தாக்கத்தினால் வீட்டின் கூரைகளும் மின் இணைப்பும் இலத்திரனியல் உபகரணங்களும் முற்றாக சேதமடைந்துள்ளன.