மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு

by Staff Writer 11-04-2022 | 7:11 PM
Colombo (News 1st) உரப் பிரச்சினை, எண்ணெய் பிரச்சினை, அந்நிய செலாவணி நெருக்கடி என்பன தொடர்பாக தொடர்ச்சியாக தகவல்களை வௌிக்கொணர்ந்ததுடன் ஏற்படக்கூடிய நிலைமை தொடர்பாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டன. எனினும், தொடர்ச்சியாக இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வினை காண முடியாமற்போனதன் விளைவுகளை இன்று முழு நாடும் அனுபவித்து வருகின்றது. மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கான பற்றாக்குறையே இன்று நாட்டு மக்கள் எதிர்நோக்க நேரிட்டுள்ள மிகவும் பாரதூரமான பிரச்சினையாகும். இந்தப் பிரச்சினை பாரிய சிக்கல்களுக்கு வித்திடலாம் என்பதால் துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் விடயங்கள் கேட்டறியப்பட்டன.