சாந்த பண்டார இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம்

சாந்த பண்டார இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம்

by Staff Writer 11-04-2022 | 10:42 PM
Colombo (News 1st) ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பொதுஜன பெரமுனவில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இன்று(11) இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துள்ளார். அதற்கமைய சேதனப் பசளை உற்பத்தி, மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குபடுத்தல், நெல், தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழில்நுட்ப கமத்தொழில் இராஜாங்க அமைச்சராக சாந்த பண்டார பதவியேற்றுள்ளார். இதற்கு முன்னதாக இந்த பதவியை ஷஷீந்திர ராஜபக்ஸ வகித்திருந்தார். இதேவேளை, பியங்கர ஜயரத்னவின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளாததால் அவர் தொடர்ந்தும் இராஜாங்க அமைச்சர் பதவியில் நீடிப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.