மின்னல் தாக்கியதில் முற்றாக சேதமடைந்த வீடு

மின்னல் தாக்கியதில் முற்றாக சேதமடைந்த வீடு

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2022 | 4:35 pm

Colombo (News 1st) முல்லைத்தீவு – வித்தியாபுரம் பகுதியில் நேற்று(10) மாலை மின்னல் தாக்கியதில் வீடொன்று முற்றாக சேதமடைந்துள்ளது.

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வித்தியாபுரம் கிராமத்தில் நேற்று(10) மாலை கடும் மழை பெய்தபோது ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் வீடொன்று சேதமடைந்துள்ளது.

மின்னல் தாக்கத்தினால் வீட்டின் கூரைகளும் மின் இணைப்பும் இலத்திரனியல் உபகரணங்களும் முற்றாக சேதமடைந்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்