கொட்டும் மழையிலும் தொடரும் ஆர்ப்பாட்டம்

by Staff Writer 10-04-2022 | 6:56 PM
Colombo (News 1st) நேற்று(09) காலை முதல் கொழும்பு காலி முகத்திடலுக்கு முன்பாக ஒன்று       தி​ரண்ட மக்கள், மழையையும் பொருட்படுத்தாது தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசாங்கத்திற்கு எதிராக பெருந்திரளான மக்கள் நேற்று(09) காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர். தேசியக் கொடியை ஏந்தியும் ஜனாதிபதிக்கு எதிரான சுலோகங்களை ஏந்தியும் மக்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவோருக்கு உணவு, குடிநீர் ஆகியன பலராலும் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன், தேவையான மருந்துப் பொருட்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.