பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி நீக்கம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி நீக்கம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2022 | 3:10 pm

Colombo (News 1st) நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நேற்றிரவு(09) நடைபெற்றது.

342 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய அஸெம்பிலியில் 174 உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த பங்காளிக் கட்சியொன்றின் 7 உறுப்பினர்களும் எதிர்த்தரப்புடன் இணைந்துகொள்வதாக அறிவித்ததையடுத்து, பிரதமர் இம்ரான் கானின் Tehreek-e-Insaf கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது.

இந்தநிலையில் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது எதிர்த்தரப்புடன் இணைந்து ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் வாக்களித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்