விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது

கடந்த ஆண்டு சிறுபோகத்தில் ஏற்பட்ட சேதங்களுக்காக விவசாயிகளுக்கு இழப்பீடு

by Bella Dalima 09-04-2022 | 7:11 PM
Colombo (News 1st) இயற்கை அனர்த்தங்களால் கடந்த ஆண்டு சிறுபோகத்தில் ஏற்பட்ட சேதங்களுக்காக விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுவதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதிச்சபையின் பணிப்பாளர் நாயகம் பண்டுக வீரசிங்க தெரிவித்தார். ஏக்கருக்கு 40,000 ரூபாவிற்கு உட்பட்டதாக 8,678 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்காக 21 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இயற்கை அனர்த்தங்களால் நெல், சோளம், சோயா, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், மிளகாய் செய்கைக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக இழப்பீடுகள் வழங்கப்படுகின்றன. முறையாக விண்ணப்பித்து இழப்பீட்டை இதுவரை பெற்றுக்கொள்ளாத விவசாயிகள் இது தொடர்பான முறைப்பாட்டை கமநல சேவை மத்திய நிலையத்தின் ஊடாக விவசாயம் மற்றும் கமநல காப்புறுதிச்சபையின் மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்ப முடியும் எனவும் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.