300,000 MT அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது

3 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது

by Staff Writer 08-04-2022 | 4:28 PM
Colombo (News 1st) பண்டிகைக் காலத்தில் குறைந்த விலையில் விநியோகிப்பதற்காக 3 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை அரச (பொது) வர்த்தகக் கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்படும் அரிசி, சதொச ஊடாக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது. இதற்கமைய, இவ்வார இறுதியில் 40,000 மெட்ரிக் தொன் அரசி நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது. இந்திய கடன் வசதியின் கீழ் குறித்த அரிசி நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் யோகா பெரேரா தெரிவித்தார். பொன்னி சம்பா, பொன்னி நாட்டரிசி மற்றும் வௌ்ளை பச்சையரிசி என்பன இவ்வாறு இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அவர் கூறினார். அத்துடன், ஒரு கிலோ பொன்னி சம்பாவை 130 ரூபாவிற்கும் ஏனைய அரிசி வகைகளை 110 ரூபாவிற்கும் விற்பனை செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்தது.