நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

இன்று முதல் 3 தினங்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

by Staff Writer 08-04-2022 | 4:37 PM
Colombo (News 1st) நாட்டின் கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல தாழமுக்கம் காரணமாக இன்றும் (08) நாளையும் (09) நாளை மறுதினமும் (10) பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்சி பதிவாகக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும், களுத்தறை, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று 100 மில்லிமீட்டர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் 50 மில்லிமீட்டர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும், மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பை பெற தேவையான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.