பேரணிகளில் சிறுவர்களை ஈடுபடுத்த வேண்டாம் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வலியுறுத்தல்

பேரணிகளில் சிறுவர்களை ஈடுபடுத்த வேண்டாம் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வலியுறுத்தல்

பேரணிகளில் சிறுவர்களை ஈடுபடுத்த வேண்டாம் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

07 Apr, 2022 | 12:30 pm

Colombo (News 1st) பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்கள் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களை வலியுறுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக நடைபெற்ற பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்கள் கலந்துகொண்டதை அவதானித்ததன் பின்னரே இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது.

குறித்த உடன்படிக்கையில் சிறுவர்களின் அதிகபட்ச பாதுகாப்பு, நல்வாழ்வை உறுதி செய்வதுடன் விபத்துகள் அல்லது உடல், உளவியல் பாதிப்புகளைத் தடுப்பதற்கும் இலங்கை உறுதி பூண்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்