தனமல்வில வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி 

தனமல்வில வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி 

தனமல்வில வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி 

எழுத்தாளர் Staff Writer

07 Apr, 2022 | 3:43 pm

Colombo (News 1st) தனமல்வில – உடவலவ வீதியில் மூன்றாம் கட்டை பகுதியில் இன்று (07) பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 03 பேர் உயிரிழந்துள்ளனர்.

கெப் ஒன்றுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

விபத்தின் போது தாயும் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் பதுளையை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினர்.

விபத்துடன் தொடர்புடைய கெப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

தனமல்வில பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்