Colombo (News 1st) தனது வாழ்க்கையில் நடந்த, பகிரங்கமாக வெளிப்படுத்த முடியாத வேதனை நினைவுகளை அமெரிக்க ‘பாப்’ பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் (Britney Spears) பகிர்ந்துகொள்ளப்போவதாக கூறியுள்ளார்.
உலகமெங்கும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிக்கும் 40 வயதான பிரிட்னி ஸ்பியர்ஸ் பாடகி, பாடலாசிரியர், நடனக் கலைஞர் என பல முகங்களைக் கொண்டவர்.
பாப் இளவரசி என்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறார். இவர் தனது சுயசரிதை (Autobiography) புத்தகத்தை எழுதுவதாக உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தனது சுயசரிதையை வௌியிடும் விருப்பத்தை வௌியிட்டுள்ளார்.
இவர் விவாகரத்தான நிலையில், தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்து மீண்டு, கடந்த ஆண்டு இறுதியில் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டமை நினைவுகூரத்தக்கது.
சுயசரிதை எப்போது வெளியாகும், எந்தப் பதிப்பாளர் வெளியிடப்போகிறார் என்பது பற்றிய கூடுதல் தகவல்களை அவர் வெளியிடவில்லை.