உ​டைமைகளுக்கு சேதம் விளைவிப்பது குற்றம்

உ​டைமைகளுக்கு சேதம் விளைவிப்பது குற்றம்: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

by Staff Writer 05-04-2022 | 8:51 PM
Colombo (News 1st) உ​டைமைகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் செயற்படுவது குற்றம் எனவும் அவ்வாறு செயற்படுவோருக்கு எதிராக சட்டத்தின் படி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படலாம் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அவ்வாறான குற்றச்செயல்களை நிபந்தனைகள் இன்றி எதிர்ப்பதாகவும், அதற்கு எதிராக சட்டபூர்வமான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் எனவும் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் சங்கம் கூறியுள்ளது. அவசர கால பிரகடனம், சமூக வலைத்தளங்களுக்கான தடை , மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளை வழங்காமை உள்ளிட்ட காரணங்களால் நாட்டில் ஆர்ப்பாட்டம் வலுப்பெற்றுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.