வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2022 | 7:41 pm

Colombo (News 1st) வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (05) எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

வவுனியா காமினி மகா வித்தியாலயம் முன்பாக ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி வவுனியா மணிக்கூட்டு கோபுரம் வரை முன்னெடுக்கப்பட்டது.

பின்னர் மாணவர்கள் A9 வீதியை மறித்து அரசாங்கத்திற்கு தமது எதிர்ப்பை வௌிப்படுத்தினர்.

இதன் காரணமாக A9 வீதியில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட போதிலும் போக்குவரத்து பொலிஸார் மாற்றுவழி மூலம் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்திருந்தனர்.

மட்டக்களப்பு – வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பின்னர் பேரணியாக செங்கலடி சந்தி வரை சென்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்