பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான இருவருக்கு பிணை

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான இருவருக்கு பிணை

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான இருவருக்கு பிணை

எழுத்தாளர் Staff Writer

04 Apr, 2022 | 7:01 pm

Colombo (News 1st) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த இருவருக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் இன்று(04) பிணை வழங்கியுள்ளது.

2020 ஆம் ஆண்டு கிளிநொச்சி – பளை பகுதியில் இடம்பெற்ற வெடிச் சம்பவம் தொடர்பில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த இருவர் சார்பிலும் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சந்தேகநபர்கள் இருவருக்கும் பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், இந்த வழக்கு இன்று(04) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த 2 சந்தேகநபர்களையும் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்