by Staff Writer 03-04-2022 | 6:03 PM
Colombo (News 1st) இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
உதய கம்மன்பில, டிரான் அலஸ் ஆகியோருடன் தாமும் இணைந்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இது தொடர்பாக கலந்துரையாடியதாக விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்கும் வகையில் இடைக்கால அரசாங்கத்தின் கீழ் எதிர்காலத்தில் நாட்டை ஆள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
அடுத்த வாரத்திற்குள் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தாவிட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் அனைத்து அரச பொறுப்புகளையும் இராஜினாமா செய்துவிட்டு பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு உடன்பாடில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம விரக்கொடி தெரிவித்துள்ளார்.