நெடுந்தீவு கடற்பரப்பில் 12 இந்திய மீனவர்கள் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் 12 இந்திய மீனவர்கள் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் 12 இந்திய மீனவர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

03 Apr, 2022 | 6:45 pm

Colombo (News 1st) SEA OF SRILANKA எனப்படும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து நெடுந்தீவு கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 12 பேர் கடற்படையினரால் இன்று(03) கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கிழக்கு கடற்பகுதியில் இன்று(03) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே 12 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர்களின் ரோலர் படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.

ஊர்காவற்றுறை பதில் நீதவான் சரோஜினி இளங்கோவன் முன்னிலையில் இந்திய மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 12 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

27 இந்திய மீனவர்கள் தற்போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், 3 ரோலர் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்