அரிசி விலை அதிகரிப்பை தடுக்க நடவடிக்கை 

அரிசி விலை அதிகரிப்பை தடுக்க நடவடிக்கை 

by Bella Dalima 02-04-2022 | 5:08 PM
Colombo (News 1st) சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் அரிசியின் விலை அதிகரிப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெரும்போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லை அரிசியாக்குவதற்காக, கூட்டுறவு மற்றும் சதொச நிறுவனங்களுக்கு நெல் சந்தைப்படுத்தல் சபை வழங்கியுள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 5000 மெட்ரிக் தொன் நெல் தற்போது அரிசியாக்கப்பட்டுள்ளது. இவற்றைத் தவிர ஏனைய தனியார் வர்த்தக நிறுவனங்களுக்கும் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக நெல் கொள்வனவு சபையின் பொலன்னறுவை மாவட்ட முகாமையாளர் தெரிவித்தார்.