ஊரடங்கு காலப்பகுதியில் பொது இடங்களில் நடமாட முடியாது:  விசேட வர்த்தமானி வௌியீடு

ஊரடங்கு காலப்பகுதியில் பொது இடங்களில் நடமாட முடியாது:  விசேட வர்த்தமானி வௌியீடு

ஊரடங்கு காலப்பகுதியில் பொது இடங்களில் நடமாட முடியாது:  விசேட வர்த்தமானி வௌியீடு

எழுத்தாளர் Bella Dalima

02 Apr, 2022 | 10:13 pm

Colombo (News 1st) ஊரடங்கு அமுலிலுள்ள காலப்பகுதியில் பிரதான வீதிகளில், ரயில் தண்டவாளங்களில், பூங்காக்களில், விளையாட்டு மைதானங்களில், கடற்கரைகளில் அல்லது பொது இடங்களில் நடமாட முடியாது என அறிவித்து விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

இன்று (02) மாலை 6 மணி முதல் நாளை மறுதினம் (04) திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையினூடாக அறிவித்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச்சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்திற்கமைவாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்