அதிக விலைக்கு எரிவாயு கொள்வனவு செய்ய வேண்டாம்: லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

அதிக விலைக்கு எரிவாயு கொள்வனவு செய்ய வேண்டாம்: லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

அதிக விலைக்கு எரிவாயு கொள்வனவு செய்ய வேண்டாம்: லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Apr, 2022 | 5:30 pm

Colombo (News 1st) அதிக விலைக்கு சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு லிட்ரோ நிறுவனம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

சிலர் அதிக விலைக்கு எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்வதாக பல பகுதிகளிலிருந்தும் தகவல் கிடைத்துள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்தார்.

இதனால் லிட்ரோ நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்ட விலைக்கு மாத்திரமே சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்யுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயுவின் விலை 2675 ரூபாவாகும்.

அதிக விலைக்கு எரிவாயுவை விநியோகிக்கப்படுமாயின், குறித்த விநியோகஸ்தர்கள் தொடர்பில் அருகிலுள்ள பொலிஸார், நுகர்வோர் அதிகார சபை அல்லது லிட்ரோ நிறுவனத்திற்கு அறிவிக்குமாறு நிறுவன தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

லிட்ரோ நிறுவனத்தின் 1311 எனும் துரித தொலைபேசி இலக்கத்திற்கும் முறையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்