சீமெந்து விலை அதிகரிப்பு

சீமெந்து விலை அதிகரிப்பு

by Staff Writer 01-04-2022 | 5:54 PM
Colombo (News 1st) சீமெந்து விலை அதிகரித்துள்ளது. உள்நாட்டு சீமெந்தின் விலையை 450 ரூபாவினாலும் இறக்குமதி செய்யப்படும் சீமெந்தின் விலையை 500 ரூபாவினாலும் அதிகரித்துள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் உப தலைவர் M.D. போல் தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, ஒரு மூடை சீமெந்தின் விலை 2350 முதல் 2400 ரூபா வரை அதிகரித்துள்ளது. இதனிடையே, கட்டுமான தொழிற்துறையில் பயன்படுத்தப்படும் பொருட்களின் விலைகள் 100% உயர்வடைந்துள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது.