ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடும்போக்குவாதிகள்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடும்போக்குவாதிகள்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடும்போக்குவாதிகள்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை

எழுத்தாளர் Staff Writer

01 Apr, 2022 | 3:51 pm

Colombo (News 1st) நுகேகொடை – ஜூப்லி சந்தியில் நேற்றிரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடும்போக்குவாதிகள் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கலகத்தை ஏற்படுத்தும் வகையில் குறித்த கடும்போக்குவாத குழுவினர் செயற்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூரான ஆயுதங்கள், கத்திகள், பொல்லுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர், மிரிஹான பிங்கிரிவத்த வீதியிலுள்ள ஜனாதிபதி இல்லத்தை நோக்கி அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் பயணித்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் கடும்போக்குவாதிகள் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மிகவும் திட்டமிட்ட வகையில், சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி மக்களை கோபமூட்டும் வகையில் நாட்டை சீரழிக்கும் நோக்குடன் குறித்த குழுவினர் அமைதியின்மையில் ஈடுபட்டமை கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்