CSE கொடுக்கல் வாங்கல்களுக்கு வரையறை

கொழும்பு பங்குச் சந்தையின் கொடுக்கல் வாங்கல்களுக்கு வரையறை

by Staff Writer 31-03-2022 | 2:11 PM
Colombo (News 1st) மின்வெட்டு காரணமாக கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த கொடுக்கல் வாங்கலை 2 மணி நேரத்திற்கு மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இன்றும்(31) நாளையும்(01) காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை மாத்திரமே கொடுக்கல் - வாங்கல் நடைபெறும் என அறிக்கை ஒன்றினூடாக கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது.